உணவுப் பொருள் விலை உயராது – அரசு உறுதி
- Surendran Sumdraraj
- 04 Apr, 2026
மலாக்கா, ஏப். 4-
நாட்டில் இறக்குமதி மற்றும் உள்ளூர் உணவுப் பொருட்களின் வழங்கல் போதுமான நிலையில் இருக்கும் வரை, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயராது என விவசாய மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது சாபு தெரிவித்ததார்.
தற்போதைய நிலவரப்படி நாட்டின் உணவுப் பொருள் வழங்கல் நிலைமை உறுதியாகவும் சீராகவும் உள்ளது. இதனால் உடனடி காலக்கட்டத்தில் விலை உயர்வு ஏற்படும் அபாயம் இல்லை என அவர் கூறினார்.
அவர் மேலும் விளக்குகையில், பொருட்களின் விலை நிலைத்தன்மை நாட்டில் கையிருப்பாக உள்ள உணவுப் பொருள் இருப்புகளின் அளவைப் பொறுத்தே அமையும் என்றார். தற்போதைய கையிருப்பு முடிவடைந்த பின், புதிய சரக்குகளை இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அவை வேறுபட்ட விலைகளில் கிடைக்கக்கூடும். இது எதிர்காலத்தில் விலை மாற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இதன் தாக்கம் முழுமையாக சூழ்நிலையைப் பொறுத்தே இருக்கும். நீண்டகாலத்திற்கு விலை உயராது என்று நான் உறுதி அளிக்க முடியாது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த அறிக்கை, உணவுப் பொருள் விலை உயர்வை குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த கவலைகளை ஓரளவு தணிக்கும் வகையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



