மன்னரை அவமதித்தவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 19: 2025 ஜனவரியில் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை அவமதித்ததாக, 40 வயதான இல்லத்தரசி மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஷா ஆலம் அமர்வு நீதிமன்றத்தில் சுஹைலா அப்துல் ஹலீம் என்ற அப்பெண் மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, இன்று நீதிபதி நார் ஹஸ்னியா அப்துல் ரசாக் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார்.

ஆறு பிள்ளைகளின் தாயான இவர், ஜனவரி 5 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் சுங்கை பூலோ மருத்துவமனையில், தனது "சுஹைலா ஹலீம்" என்ற முகநூல் கணக்கில் அகோங்கைப் பற்றி வேண்டுமென்றே அவமதிக்கும் கருத்துக்களைப் பதிவிட்டு, இணைய வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்நிலையில், நீதிமன்றம் RM7,000 பிணைத்தொகையை நிர்ணயித்து, வழக்கு முடியும் வரை சுஹைலா தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. வழக்கு விசாரணை ஜூலை 21 அன்று நடைபெறும் எனத் தேதியிடப்பட்டது.

சுஹைலா மீது முதலில் ஜூலை 2025-ல் இதே குற்றத்திற்காகக் குற்றம் சாட்டப்பட்டது. இன்று ஏன் புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *