2 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவர் மீது இன்று குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினாபாலு, ஜூன் 30-

மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் ஒரு வர்த்தகர் மீதும் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும். சபா கோத்தா கினாபாலுவின் சிறப்பு லஞ்சஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் காலை மணிக்கு அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் என்றம் சபா எம்ஏசிசி குறிப்பிட்டது.

2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நான்கு குற்றங்கள் சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லஞ்சம் கொடுத்ததாக இரண்டு குற்றங்களும் லஞ்சம் வாங்கியதாக இரண்டு குற்றங்களும் அவர்கள் மீது சுமத்தப்படவுள்ளன.சபா மாநிலத்தின் சுரங்கத் தொழில் லைசென்ஸூகளை வெளியிட்டதன் தொடர்பில் “ஒப் ஆடுன்" எனும் பெயரில் எம்ஏசிசி அண்மையில் தீவிர சோதனை நடத்தியது.

கடந்தாண்டு நவம்பரில் வெளியான ரகசிய காணொளிப் பதிவுகள் தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்தத் தொடங்கினர்.
சபாவில் சுரங்கத் தொழில் லைசென்ஸ் தொடர்பில் ஒன்றரை லட்சம் வெள்ளி கையூட்டுப் பெற்றதன் தொடர்பில் மேலும் ஒரு சபா சட்டமன்ற உறுப்பினர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று எம்ஏசிசி அறிவித்திருந்தது. அமைச்சர் ஒருவரின் உதவியாளராரக செயல்பட்ட அந்நபர் இம்மாதம் 23ஆம் தேதியன்று சபா எம்ஏசிசி அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.அந்த ஊழல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர் இவராவார்.

Dua ADUN dan seorang peniaga akan didakwa di Mahkamah Khas Rasuah Kota Kinabalu atas empat pertuduhan rasuah berkaitan lesen perlombongan. Mereka ditahan oleh SPRM susulan siasatan video rahsia dan serbuan operasi “Ops Aduan”.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *