ஓப்ஸ் தாரிங் அல்ஃபா: வெ.60லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக்.30-

கெப்போங்கில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் தாரிங் அல்ஃபா சோதனை நடவடிக்கையில் வெ.60லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்புள்ள வரியில்லாத சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தது மட்டுமின்றி 4 ஆடவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது அமைதித் துறையின் வனவிலங்கு குற்றப் பிரிவு/சிறப்பு புலனாய்வு பிரிவு, செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.50 மணிக்கு இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அத்துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.

கெப்போங் வர்த்தக பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு 6 டன் லோரியிலிருந்து 3 வேன்கள், 1 டன் லோரி, 1 காருக்கு வரியில்லாத சிகரெட்டுகள் இறக்கி வைக்கப்படுவது தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த 6 வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 31 முதல் 44 வயதிற்குட்பட்ட 4 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு சிகரெட்டுகள் ஹியுண்டாய் ஸ்டாரெக்ஸ் கார் (1), பல்வேறு முத்திரைகள் கொண்ட கைப்பேசி கள் (8) ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதில் வெ.62 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வேளையில், இந்நடவடிக்கையின் மூலம் ஒட்டுமொத் தமாக வெ.95 லட்சத்து 26 ஆயிரத்து 400 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இச்சம்பவம் 1967 சுங்கச் சட்டம், 135(1)ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக ஓர் அறிக்கையில் டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *