இம்மாதத்தில் 13 குற்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளது MOTAC

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 20-

இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 22 அமலாக்க நடவடிக்கைகளில் 13 குற்ற அறிவிக்கைகளை சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ளது.

இந்நடவடிக்கையில் 180 வாகனங்கள், 30 சுற்றுலா நிறுவனங்கள், நான்கு தங்குமிட வளாகங்கள் மற்றும் 33 சுற்றுலா வாகனமோட்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் MOTAC குறிப்பிட்டுள்ளது.
பேராக்கில் உரிமம் பெறாத சுற்றுலா நிறுவனங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 1992ஆம் ஆண்டு சுற்றுலா தொழில்துறை சட்டத்தின் கீழ் அதிகபட்சம் ஐந்து லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக,மாநில சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது இணையம் மூலமோ உரிமம் பெறுவதற்கு
விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அனைத்து சுற்றுலா சேவை வழங்குநர்களுக்கும் சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு நினைவூட்டியது. அதைத் தவிர்த்து.
சுற்றுலாத் தொழில்துறையில் சட்டம் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், மற்ற அமலாக்க நிறுவனங்களுடனான ஒத்துழைப்பையும் சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு தொடர்ந்து வலுப்படுத்தும்.

சந்தேகத்திற்கிடமான சுற்றுலா நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சின் பொது புகார்களுக்கான நிர்வகிப்பு அமைப்பின் மூலம் தெரிவிக்க பொதுமக்களும் தொழில்துறையினரும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *