யாருடன் கூட்டுச் சேர்வது என்பதில் மசீசவுக்கு பல வாய்ப்புகள் உள்ளன!
- Muthu Kumar
- 25 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 25-
தேசிய முன்னணியில் இன்னமும் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்தாலும், எதிர்வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் எந்தக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது என்று முடிவு செய்ய மசீசவுக்கு பல வாய்ப்புகள் இருப்பதாக, அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
எந்தக் கூட்டணியில் சேருவது என்பது நேரம் வரும்போது முடிவு செய்யப்படும் என்றும் மசீசவுக்கு "பல வாய்ப்புகள்" இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். "எங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன என்று நான் கூறுகிறேன். ஆனால், இப்போது அது குறித்து முடிவு ஏதும் செய்யப்படாததால் அது குறித்து மேலும் கருத்துரைக்க நான் விரும்பவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்' என்று, கோலாலம்பூரில் உள்ள மசீச தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின்போது, ஒரு
பொறியியலாளருமான கா சியோங் தெரிவித்தார்.
"எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதிலும் எந்தக் கூட்டணியில் சேர்வது என்பது குறித்தும் மசீசவின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில், தேசிய முன்னணியில் மசீசவின் நிலை குறித்து கேட்டபோது,
கட்சி தொடர்ந்து தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் என்றும் ஒப்புக் கொள்ளப்படாத விவகாரம் இருந்தாலும் தனது நிலைப்பாடு தெளிவானதாக இருக்கும் என்றும் கா சியோங் பதிலளித்தார்.
"மசீசவில், நாங்கள் ஒன்றில் உடன்படவில்லை என்றால், உடன்படவில்லை என்று சொல்லுங்கள் என்ற கொள்கையை நாங்கள் பின்பற்றுகிறோம். இன்னும் முழுமையடையாத, ஆனால் இன்னும் முடிவு செய்யப்பட வேண்டிய ஏதாவது இருந்தால், நாங்கள் ஒரு தெளிவான நிலைப்பாட்டை அவசியம் எடுத்தாக வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
தேசிய முன்னணியை விட்டு மசீச வெளியேற வேண்டும் என்று வெளியில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கடந்த மாதத்தில் அவர் சாடியிருந்தார்.இதில் எந்த ஒரு முடிவாக இருந்தாலும் மசீசவினால் மட்டுமே முடிவு செய்யப்படும் என்று அவர் தீர்க்கமாக அதற்கு பதிலளித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



