TRUMP செய்தது சர்வதேச பலாத்காரம்! - அன்வார்
- Shan Siva
- 05 Jan, 2026
கோலாலம்பூர். ஜன 5: வெனிசுலாவில் நடக்கும்
நிகழ்வுகளை தாம் மிகுந்த கவலையுடன்
கவனித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசுலாவின் அதிபரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டது சர்வதேச
சட்ட மீறல் என்றும், இறையாண்மை கொண்ட ஓர்
அரசுக்கு எதிராக சட்டவிரோதமாக பலாத்காரத்தைப் பயன்படுத்துவதற்குச் சமமாகும் என்றும்
அன்வார் கூறினார்.
மதுரோவும் அவரது
மனைவியும் தாமதம் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும். காரணங்கள் எதுவாக இருந்தாலும், வெளிப்புற நடவடிக்கை மூலம் பதவியில் இருக்கும் அரசாங்கத் தலைவரை
வலுக்கட்டாயமாக நீக்குவது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என்று அன்வார் சுட்டிக்காட்டினார்.
இது சர்வதேச ஒழுங்கை ஆதரிக்கும் சட்ட கட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
வெனிசுலா மக்கள் தங்கள்
சொந்த அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். வரலாறு காட்டியுள்ளபடி, வெளிப்புற சக்தி மூலம் கொண்டு வரப்படும் திடீர் தலைமைத்துவ மாற்றங்கள் நன்மையை
விட அதிக தீங்கு விளைவிக்கும். ஏற்கனவே நீண்டகால பொருளாதார நெருக்கடி மற்றும்
ஆழமான சமூக அழுத்தத்துடன் போராடி வரும் ஒரு நாட்டில் இது மேலும் சோகம் என அவர் கூறினார்.
மலேசியா சர்வதேச சட்டம்
மற்றும் இறையாண்மைக்கான மரியாதையை நாடுகளுக்கு இடையிலான அமைதியான உறவுகளுக்கு மிக
முக்கியமானதாகக் கருதுகிறது என்று அன்வார் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



