நஜிப்புக்கும் ஜொகூர் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஊழல் குற்றவாளி! - முகைதீன் யாசின்
- Shan Siva
- 05 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 5: ஊழல் குற்றச்சாட்டுக்காக தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப்
ரசாக்கிற்கு மன்னிப்பு வழங்குவதற்கும், ஜொகூர் தேர்தலுக்கும் என்ன
சம்பந்தம் என பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் கேள்வி எழுப்பியுள்ளார்.
11 ஆண்டுகளுக்கு முன்பு 1எம்டிபி தொடர்பான விமர்சகர்களில்
ஒருவராக இருந்த முகைதின், நஜிப் ஏற்கனவே குற்றவாளி எனத்
தீர்ப்பளிக்கப்பட்டவர் எனக் கூறினார்.
ஜெர்சிக்கில் செராமாவில் பேசிய முகைதின், நஜிப் சிறையில் இருந்து
விடுவிக்கப்படுவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா என்று கூட்டத்தினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அவரின் அந்தக் கேள்விக்கு இல்லை
என்ற பதிலே வந்தது.
நஜிப்பின் அரசாங்கத்தில் தாம் துணைப் பிரதமராக இருந்தபோது, 1எம்டிபி பற்றி கவலை
தெரிவித்ததாகவும் முகைதின் கூறினார். இதையடுத்து 2015-ம் ஆண்டு துணைப் பிரதமர்
பதவியிலிருந்து முகைதீன் நீக்கப்பட்டார்.
முன்னதாக, நஜிப்பின் மகன் நஜிபுதீன், ஜொகூர் தேர்தலில் பாரிசான் நேஷனல் பெரும் வெற்றி, மக்கள் நஜிப்பிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதைக் காட்டும் என்றும், அவருக்கு அரச மன்னிப்பு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



