எனக்கு எமன் இந்த நடிகர் -ராதா ரவி!

top-news
FREE WEBSITE AD

நடிகர் ராதாரவி, சமீபத்தில் கலா மாஸ்டரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான மற்றும் உருக்கமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அதில், நடிகர் பிரசாந்த் தன்னுடைய படத்தைக் காணாமல் போகச் செய்ததாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டது, அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பன்முக நடிகரான ராதாரவி, வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். கலா மாஸ்டருக்காக நடத்தப்பட்ட விழாவில் பேசிய அவர், "நான் 'சின்னமுத்து' என்ற ஒரு படத்தை ரிலீஸ் பண்ணினேன். அந்த நேரத்தில் பிரசாந்த் அவருடைய ஒரு படத்தை ரிலீஸ் பண்ணி, என்னுடைய படத்தைக் காணாமல் போக வைத்துவிட்டான். ஒரு வாரத்திலேயே அந்தப் படத்தை வெளியே தூக்கிவிட்டார்கள்," என்று வெளிப்படையாகப் பேசினார். இதைக் கேட்டு மேடையில் இருந்த பிரசாந்த் சிரித்துக்கொண்டிருந்தார்.

கலா மாஸ்டர் பற்றிப் பேசிய ராதாரவி, "கலா மாஸ்டர் ஆரம்பத்தில் ரொம்ப ஒல்லியாக இருப்பார். அவர் தமிழ் சினிமாவில் அத்தனை நடிகர்களையும் ஆட வச்சிருக்காங்க. அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பிரமிப்பாக இருக்கும்.

இன்னைக்கு நல்ல நிலைமைக்கு இருக்கிறாங்கன்னா, அவங்க எவ்வளவு எதிர்ப்பையும், எவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி வந்திருப்பாங்க. ஒருமுறை என்கிட்ட பேசும்போது, 'வாழ்க்கையில் நான் அனுபவித்த கஷ்டங்கள் வேறு யாரும் அனுபவித்திருக்க முடியாது' என்று சொன்னாங்க. அது உண்மைதான். அந்தளவிற்கு கலா மாஸ்டர் கஷ்டப்பட்டிருக்காங்க," என்று உருக்கத்துடன் பேசினார்.

"நான் கூட அவருடைய கணவரிடம், 'நீங்க வீட்ல கணவரா இருக்கீங்களா இல்ல மனைவியாக இருக்கீங்களா?' என்று கிண்டல் செய்வேன். காரணம், கலா மாஸ்டர் அவ்வளவு ஆளுமையோடு இருப்பாங்க. அவ்வளவுதான், என்னையே சில இடங்களில் டான்ஸ் ஆட வைத்திருக்கிறார்," என்று ராதாரவி அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *