பாரிசானில் ம.இ.கா-வின் நிலை என்ன? அடுத்த மாதம் முடிவு செய்யப்படும்! – ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 20: கூட்டணிக்குள் மஇகாவின் நிலைப்பாடு உட்பட அதன் கூட்டணிக் கட்சிகள் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை விவாதிக்க பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிசான் நேஷனலுக்குள் அம்னோவின் நிலைப்பாடு மாறாமல் இருப்பதால், இந்த விவகாரம் அம்னோ பொதுச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார். அதற்கு பதிலாக கூட்டணியின் உயர் தலைமைக் கூட்டத்தில் இந்த விஷயம் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தை நடத்துவோம், அங்குதான் முடிவு எடுக்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ம.இ.காவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மூன்று தீர்மானங்களை முன்வைத்த பிறகு, கூட்டணியில் இருந்து கட்சி வெளியேறுவதா அல்லது பாரிசான் நேஷனலில் நீடிப்பதா என்பது குறித்த முடிவை ..கா-வின் 79-து பேராளர் மாநாட்டில்  ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்தது.

கூட்டணியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர மஇகா விண்ணப்பிக்க வேண்டும் என்ற முன்மொழிவும் அந்த மாநாட்டில் வைக்கப்பட்டது..

 உச்ச மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் வரை, பாரிசான் நேஷனலுக்குள் மஇகாவுடனான அம்னோவின் உறவு மாறாமல் உள்ளது என்று ஜாஹிட் வலியுறுத்தினார்.

பாரிசானின் மற்றொரு கூட்டணிக் கட்சியான எம்சிஏ, 16வது பொதுத் தேர்தலில் (ஜிஇ—16) டிஏபி உடன் பாரிசான் இணைந்து செயல்பட்டால் கூட்டணியில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, இதேபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியந்து. இந்நிலையில் வரவிருக்கும் பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *