வாட்ஸாப் ஸ்கேம் - RM 1 லட்சம் இழந்த ஆசிரியை!
- Shan Siva
- 27 Oct, 2025
ஜொகூர் பாரு, அக் 27: ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை தனது கணவர் போல் நடித்த
ஒரு நபரிடமிருந்து வாட்ஸ்அப்பில் வந்த செய்திகளால் ஏமாற்றப்பட்டு RM100,000 இழந்தார்.
52 வயதான
பாதிக்கப்பட்ட பெண்ணிடம், ஒரு தனியார்
நிறுவனத்தின் பொது மேலாளரான தனது 'கணவருக்கு'
ஒரு வணிக விஷயத்தில் உதவுவதற்காக கடன்
கேட்கப்பட்டதாக ஜொகூர் பாரு செலாத்தான்
காவல்துறைத் தலைவர் ACP ரவூப் செலாமட் கூறினார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று வெவ்வேறு
கணக்குகளுக்கு மொத்தம் RM100,000 மதிப்புள்ள ஏழு
வங்கி பரிமாற்றங்களைச் செய்தார் என்று அவர் இன்று
ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பணம் செலுத்திய
பின்னரே, ஒரு வார கால வணிகப்
பயணத்தில் சீனாவில் இருந்த தனது கணவரைத் தொடர்பு கொண்டார். ஆனால், கனவரோ தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும், நேற்று போலீசில் புகார் அளித்ததாகவும் ரௌப்
கூறினார்.
மோசடி
குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்
கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



