அது புத்திசாலித்தனமற்றது! - அன்வார்
- Shan Siva
- 09 Nov, 2025
புக்கிட் மெர்தாஜாம், நவ 9: தாய்லாந்து-கம்போடியா அமைதி ஒப்பந்தத்தில் தனது
பங்கைப் பற்றி தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரல் ஒருவர் விமர்சித்ததை
பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிராகரித்து, அவரின் கூற்றுக்கு "தேர்தல் தோல்வி"யின் வெளிப்பாடு என்று
விவரித்தார்.
அவர் நம்
நாட்டில் உள்ள பெஜுவாங்கைப் போலவே, ஒரு தேர்தலிலும்
வெற்றி பெறாத ஒரு தாய் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறினார்.
அவர் எந்த
இடத்தையும் வெல்லவில்லை என்பது மட்டுமல்லாமல், இங்குள்ள பெஜுவாங்கைப் போலவே தனது தேர்தல்
வைப்புத்தொகையையும் இழந்துள்ளார் என்று தெரிவித்தார்.
தாய்லாந்தின்
தேசிய சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத வலதுசாரிக் கட்சியான பொருளாதாரக்
கட்சியை ரான்சி வழிநடத்துகிறார்.
அண்மையில்
அன்வாரை அமெரிக்க உளவாளி என்று ராங்சி கூறியிருந்தெ என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



