அதனால்தான் அன்வார் மீது வழக்கு தொடர்ந்தேன்! - மகாதிர்
- Shan Siva
- 21 Oct, 2025
ஷா ஆலம், அக் 21: பிரதமர் அன்வார் இப்ராஹிம் பதவியேற்ற பிறகு கூறிய
கருத்துக்கள் பொதுவெளியில் தமது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததால், அவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது இன்று உயர்
நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தனது RM150 மில்லியன் அவதூறு வழக்கில் முதல் சாட்சியாக
சாட்சியமளித்த நூறு வயதான மகாதிர், 22 ஆண்டுகள் 22
மாதங்கள் அதிகாரத்தில் இருந்த ஒருவர் என்ற அன்வாரின் கருத்துக்கள் தம்மைப் பற்றிய
தெளிவான குறிப்புதான் என்று கூறினார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, மார்ச் 18 ஆம் தேதி பிகேஆர் சிறப்பு தேசிய மாநாட்டின் போது
மகாதீரைப் பற்றியதாகக் கூறப்படும் கருத்துகளை அன்வார் பேசியதாகக் கூறப்படும் நிலையில், மகாதிர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கைத்
தாக்கல் செய்தார்.
அன்வாரின் தன்னையும்,
தனது குடும்பத்தினரையும், கூட்டாளிகளையும் பணக்காரர்களாக மாற்றியதாகவும்,
வரி செலுத்தத் தவறியதாகவும், நிதியை வெளிநாடுகளுக்கு மாற்றியதாகவும் தம்மைப்
பற்றி மறைமுகமாகக் கூறுவதாக அவர் கூறினார்.
அன்வார்
சமர்ப்பித்த எந்த ஆதாரமும் தாம் அரசாங்க நிதியை மோசடி செய்ததாகக் காட்டவில்லை
என்றும், தனது ஒரே வருமான ஆதாரம்
சம்பளம் மட்டும்தான் என்றும் நீதிமன்றத்தில் மகாதிர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



