பிகேஆர் என்னை இடைநீக்கம் செய்தால் நூருல் இஸ்ஸாவை என்ன செய்யும்?

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 15-

நீதித் துறை விவகாரம் தொடர்பில் தம்மை கடுமையாகச் சாடிவருவோர், இப்போது நூருல் இஸ்ஸாவையும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு கட்சித் தலைமைத்துவத்திற்கு கோரிக்கை விடுப்பார்களா என்று, பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

நீதித்துறை நியமனம் தொடர்பில் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று தாம் கோரிக்கை விடுத்த பின்னர், தம்மை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புத்ராஜெயாவில் நேற்று திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இதே விவகாரம் தொடர்பிலான "நீதிக்கான நடை” என்ற பேரணியில் கலந்து கொண்டதற்காக, பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸாவையும் இடைநீக்கம் செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுப்பார்களா என்றுஅவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நூருல் இஸ்ஸாவின் நடவடிக்கை, கட்சியை "ஒரு தர்மசங்கடமான நிலையில்" கொண்டு போய் வைத்துள்ளது என்று, மலேசியாகினியிடம் ரஃபிஸி தெரிவித்தார்."உண்மையில் அவர் கட்சியை காப்பாற்ற முடியும். காரணம், கட்சியின் துணைத் தலைவர் எனும் முறையில் உயர்மட்டத் தலைவர்களின் கருத்துகளை அவர்கள் (அடிமட்ட உறுப்பினர்கள்) கேட்பார்கள். ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சாதாரண அரசாங்க ஆதரவாளர்கள்தான்.

நீதிபதிகள் நியமனம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக, அண்மையில் செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தியதன் மூலம், கட்சியின் கட்டொழுங்கை மீறிய காரணத்தினால் ரஃபிஸி உட்பட இதரஎட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று, ஜொகூர் மாநிலத்தின் 19 பிகேஆர் தொகுதித் தலைவர்கள் சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு ஒரு நாளுக்குப் பின்னர், கெடாவில் உள்ள 11 பிகேஆர் தொகுதித் தலைவர்கள் அக்கோரிக்கையை ஆதரித்திருந்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *