13வது மலேசியா திட்டம் (13MP) மிகவும் பலவீனமானது- ரஃபிஸி ரம்லி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 9:

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 13வது மலேசியா திட்டம் (13MP) மிகவும் பலவீனமானது என்ற விமர்சனங்களுக்கு எதிராக ரஃபிஸி ரம்லி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.13MP என்பது உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் பட்டியல் என்று முன்னாள் பொருளாதார அமைச்சருமான அவர் கூறினார்.

இருப்பினும், 13MP என்பது "திட்டங்களின் பட்டியல்" அல்ல, மாறாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டும் ஒரு கொள்கை ஆவணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் பெரிதாக எதுவும் இல்லை என்ற உணர்வை சிலருக்கு ஏற்படுத்தியிருப்பதாக அண்மைய போட் காஸ்ட் நிகழ்ச்சியில் கூறினார்.

மச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமது ஃபைசல் வான் அகமது கமல், இந்தத் திட்டத்தில் "வாவ் காரணி" இல்லை என்றும், அது பெரும்பாலும் முந்தைய கொள்கைகளின் தொடர்ச்சியாக இருப்பதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.ஐந்து வயதில் பாலர் பள்ளியை கட்டாயமாக்குதல், ஆறு வயதில் 1 ஆம் வகுப்பைத் தொடங்குதல் மற்றும் 16 வயதிற்குள் ஐந்தாம் படிவத்தை முடித்தல் என்ற 13MP-யின் முன்மொழிவையும் ரஃபிஸி ஆதரித்தார்.

இத்தகைய அணுகுமுறை இளைஞர்கள் 16 வயதில் பணியிடத்தில் சேரலாம் அல்லது ஒரு வருடம் முன்னதாகவே தங்கள் பட்டப்படிப்பை முடிக்கலாம் என்று பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
மலேசியா வயது மிகுந்தவர்களின் நாடாக மாறுவதால், இளைய பணியாளர்கள் தேவைப்படுவதால், இதுபோன்ற மாற்றம் அவசியம் என்று ரஃபிஸி கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *