பந்திங்கில் காற்றின் தரம் 155 ஆக உள்ளதால் வெளி நடவடிக்கைகளைக் குறைத்து கொள்வீர்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், ஜூலை 23-

பந்திங் உட்பட மாவட்ட ரீதியில் காற்றின் தரம் 155 ஆக உள்ளதால் அதன் தரம் மோசமடைந்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்களது வெளி நடவடிக்கைகளைக் குறைத்து கொள்ளும்படி கோலலங்காட் நகராண்மைக்கழகத் தலைவர் முகமட் ஹஸ்ரி நோர் முகமட் தெரிவித்தார்.

மெட் மலேசியா வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இவ்வட்டாரத்தில் காற்றின் தரம் ஆரோக்கியம் குறைந்து காணப்படும் இடங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நிறுத்தி கொள்வது நல்லது என்று அவர் ஆலோசனை கூறினார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் செல்ல நினைப்போர் கட்டாயம் முகக் கவசங்கள் அணிந்து செல்வது சிறப்பு என்று
முகமட் ஹஸ்ரி தெரிவித்தார். மோசமான பருவநிலையை நாடு சந்திக்கும் இந்தத் தருணத்தில் குடியிருப்பாளர்கள் மாவட்ட ரீதியில் திறந்த வெளி குப்பைகள் எரிப்பு நடவடிக்கைகளை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நகராண்மைக் கழகத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் அமலாக்க அதிகாரிகள் தற்போது குடியிருப்புப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முகமட் ஹஸ்ரி தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *