பிலிப்பைன்சின் அத்துமீறலை முறியடிக்க மலேசிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-டத்தோஸ்ரீ யோங் தெக் லீ!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினாபாலு, நவ. 11-

பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இரண்டு கடலியல் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. சர்ச்சைக்குரிய அச்சட்டங்களை முறியடிக்க மலேசியா தனது அரசதந்திர, அரசியல் பலத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று சபா முற்போக்கு கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ யோங் தெக் லீ நேற்று வலியுறுத்தினார். அவ்விரு சட்டங்களும் ஐநாவின் கடலியல் சட்ட மரபின் அன்குளோஸ் கீழ்வரும் சபாவின் கடலடிக் கண்டத்தின் எல்லையை மீறுவதாக உள்ளது என்று யோங் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் நிறைவேற்றியிருக்கும் அச்சட்டங்கள் நமது கடல் எல்லைகள் மீது உரிமை கோருவதுபோல் உள்ளது என்றார் அவர். அவ்விரு சட்டங்களிலும் பிலிப்பைன்ஸ் அதிபர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கையெழுத்திட்டார். சபாவின் கடல் பிரதேச உரிமைகள் 1954-ஆம் ஆண்டிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்நேரத்தில் அது பற்றி எந்த ஆட்சேபனையும் எழுப்பப்படவில்லை. குறிப்பாக, பிலிப்பைன்ஸ் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்றார் யோங்.

தற்போது காலம் கடந்த நிலையில், வரலாற்று உண்மைகளைப் பொருட்படுத்தாமல் சபாவின் கடல் எல்லைகள் மீது உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளது. சபாவின் குடாட்/பாங்கியை எல்லையாகக் கொண்ட பலாபாக் நீரிணை மற்றும் அம்மாநிலத்தின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள செலிபியஸ் அல்லது சூலு கடல் பகுதி ஆகியவை மீது அந்நாடு புதிதாக உரிமை கொண்டாடி வருகிறது. பிலிப்பைன்சின் அந்த அத்துமீறலை முறியடிக்க மலேசிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் யோங் வலியுறுத்தினார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *