திருத்தம் செய்யப்பட்ட ஃபினாஸ் சட்டம் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும்!
- Muthu Kumar
- 12 Sep, 2025
கோலாலம்பூர், செப். 12-
திருத்தம் செய்யப்பட்ட 1981ஆம் ஆண்டு, மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான, ஃபினாஸ் சட்டம், சட்டம் 244 முதல் வாசிப்புக்காக அடுத்த மாதம் மக்களவையில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் தேவைகளுக்கு ஏற்ப இச்சட்டம் இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் நாட்டின் திரைப்படத் துறையினரின் நலனைப் பாதுகாப்பதற்கும் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"முதல் வாரத்தில் முதல் வாசிப்பை எதிர்பார்க்கிறோம். முதல் வாசிப்பு மேசையில் வைக்கப்பட்டுள்ளது. தொழில்துறையுடன் அதிக கலந்துரையாடல்களை நடத்த ஃபினாஸை நான் கேட்டுள்ளேன். ஆனால் ஃபினாஸும்,அமைச்சும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்கூட்டியே ஒரு கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொண்டேன். இதனால் திரைப்படத் துறையின் நன்மைக்காக நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்." என்றார் அவர்.
நேற்று வியாழக்கிழமை, கோலாலம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் திரைப்பட விழாவை தொடக்கி வைத்த பின்னர் ஃபாஹ்மி செய்தியாளர்களிடம் பேசினார்.திரைப்படத் துறையில் தற்போது நிலவும் பல்வேறு சவால்களைக் கருத்தில் கொண்டு இந்தத் திருத்தம் செய்யப்படுவதாகவும், இதனால் தொழில்துறையின் நிலைத்தன்மை மற்றும் எதிர்கால நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் விவரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



