மக்களுக்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படலாம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 22-

நாட்டு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முக்கிய அறிவிப்பு இன்று செவ்வாய்க்கிழமை அல்லது நாளை புதன்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கின்றார்.

அந்த முக்கிய அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய இன்னும் சிறிது காலஅவகாசம் தேவைப்படுவதாக அவர் கூறுகிறார்.இதன் தொடர்பிலான கோரிக்கைகளுக்குத் தேவையான மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகள் பற்றி தாம் சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகக் கூறிய நிதி அமைச்சருமான அன்வார், அடுத்த ஒரு நாள் அல்லது இரு நாள்களில் தாம் அறிவிப்பு செய்ய வேண்டியுள்ளது என்றார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை எதிர்கொள்ளும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று கடந்த சனிக்கிழமை பினாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அன்வார் கோடிகாட்டியிருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *