மக்கள் மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக பிரதமர் வேட்பாளரை தேசியக் கூட்டணி அறிவிக்க வேண்டும்!
- Muthu Kumar
- 18 Sep, 2025
கோலாலம்பூர், செப். 18-
மக்கள் மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக பிரதமர் வேட்பாளரை தேசியக் கூட்டணி முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துன் பைசல் இஸ்மாயில் அஜீஸ் வலியுறுத்தினார்.
16ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு தேசியக் கூட்டணி பிரதமர் வேட்பாளரை
முன்னிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.இதன் மூலம் நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்க நியமிக்கப்பட்ட நபரை மக்கள் மதிப்பீடு செய்ய முடியும்.அதனால் தான் தேசிய கூட்டணி கருத்தில் கொள்ள பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை பிரதமர் வேட்பாளர் என்று பெயரிட்டது.
அன்றைய தினம் கட்சியில் ஒரு முடிவை எடுக்கும்போது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க, மக்களுக்கு மதிப்பீடு செய்ய வாய்ப்பளிப்பது நல்லது என்று நாங்கள் கருதுகிறோம்.அவர்கள் விவாதிக்க விரும்பினாலும் சரி அல்லது தங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்பினாலும் சரி, எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



