சாரா உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது!
- Muthu Kumar
- 11 Aug, 2025
கோத்தா கினபாலு, ஆக.11-
சனிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்ட சாரா கைரினா மஹாதீர் உடலின் பிரேத பரிசோதனை கோத்தா கினபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் நேற்று காலை 9 மணிக்குத் தொடங்கியது.
பிரேத பரிசோதனைக்கு முன்னதாக, சிடி ஸ்கேன் மேற்கொள்ள சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் சாராவின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
காலை மணி 8.26 அளவில், சாராவின் தாயார் நோராய்டா லாமாட், தமது குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள் ஹமிட் இஸ்மாயில் மற்றும் ஷாஃவ்லான் ஜூஃப்ரி ஆகியோருடன் மருத்துவமனைக்கு வந்தது பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.
வழக்கின் அண்மைய முன்னேற்றங்களை தெரிந்து கொள்ள காலை மணி 8 தொடங்கி மருத்துவமனை வளாகத்தில் ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் கூட தொடங்கினர்.குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர், தடயவியல் மற்றும் மத அதிகாரிகள் முன்னிலையில் நேற்று சபா, சிபிதாங்கில் உள்ள தஞ்சோங் ஊபி இஸ்லாமிய மையத்து கொல்லையில் மேற்கொள்ளப்பட்ட சாராவின் உடலை மீண்டும் தோண்டி எடுக்கும் பணி இரவு மணி 7.15 க்கு நிறைவு பெற்றது.
கடந்த ஜூலை 16ஆம் தேதி அதிகாலை மணி நான்கு அளவில் சபா பாப்பாரில் உள்ள தங்குமிட வசதிகொண்ட பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து 13 வயதுடைய சாரா கைரினா கீழே விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



