சக்கர நாற்காலியில் இருந்தவாறே மீட்கப்பட்ட சடலம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 5: கோலா சிலாங்கூர், சுங்கை கம்போங்,  குவாந்தான் ஆற்றில் நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் ஒருவரின் உடல், அவர் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 5.5 கி.மீ. தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சுமார் 8.30 மணியளவில், பத்து 7-ல் உள்ள ஒரு படகுத்துறைக்கு அருகே, சக்கர நாற்காலியில் இருந்தவாறே பாதிக்கப்பட்டவர் பொதுமக்களால் கண்டறியப்பட்டார்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரவு 9.09 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர்  அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இதனை அடுத்து பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு நிலையப் பணியாளர்கள், நீர் மீட்புக் குழு மற்றும் கே9 பிரிவு ஆகியோரை உள்ளடக்கிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மீட்புப் பணி இடைநிறுத்தப்பட்டு, இன்று  மீண்டும் தொடங்கப்பட்டது என்று அவர் கூறினார். 

பாதிக்கப்பட்டவர் விழுந்ததாக நம்பப்படும் இடத்திலிருந்து சுமார் 5.5 கி.மீ தொலைவில் அவரது உடல் இறுதியில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

மீட்புப் படையினரால் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *