நாட்டின் கடன் நெருக்கடி அடுத்துவரும் அரசாங்கத்தைப் பாதிக்கும்!
- Muthu Kumar
- 16 Oct, 2025
கோலாலம்பூர்,அக். 16-
நாட்டின் கடன் நெருக்கடி அடுத்தடுத்து வரும் அரசாங்கத்தைப் பாதிக்கும் என பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி கூறினார்.இந்த ஆண்டு நாட்டிற்கு 15.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வருமானம் கிடைத்தது.இருந்தாலும் வருமான இடைவெளியைக் குறைக்க அரசாங்கம் தவறியது கவலையை ஏற்படுத்துகிறது.
2026 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, வரும் ஆண்டுகளில் இந்த சவால் அதிகரிக்கும்.எனவே, இப்போதிலிருந்து இரண்டு ஆண்டுகளில் யார் அரசாங்கமாக விரும்பினாலும், அரசாங்க வருவாயின் சவால் உண்மையானது தான் என்று அவர் மக்களவையில் கூறினார்.
அதிக அளவிலான கடன் எதிர்காலத்தில் நாட்டிற்கு முதன்மையான அச்சுறுத்தல்.
இது வெளிப்படும் வழிகளில் ஒன்று உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் என்று அவர் விளக்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



