நாட்டின் வளர்ச்சி ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான பண்புகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்! - அன்வார்
- Shan Siva
- 13 Sep, 2025
மெர்சிங், செப் 13: ஒரு முன்னேறிய நாட்டின் வளர்ச்சி ஒழுக்கம் மற்றும் இரக்கம் போன்ற மனிதாபிமான பண்புகளின்
அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.
ஒரு நாட்டின்
வெற்றியின் உண்மையான அளவுகோல் அதன் பொருளாதார சாதனைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவு
ஆகியவற்றில் மட்டுமல்ல, அதன் மனிதாபிமான நெறிகளில்
உள்ளது என்று அவர் கூறினார்.
கல்வியில் சிறந்து விளங்குவதில் பெருமைப்படுகிறோம்,
திறன்களைப் பற்றி பெருமைப்படுகிறோம், ஆனால் மனித கண்ணியத்தின் மதிப்புகளை
வளர்ப்பதில் இன்னும் பெருமைப்பட வேண்டும் என்று அவர்
கூறினார்.
சாரணர்
இயக்கத்தில் வலியுறுத்தப்பட்ட மனிதாபிமான நெறிகளான ஒழுக்கம், திறன்கள் மற்றும் சகோதரத்துவம் போன்றவை
வாழ்க்கையில் புகுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
ஏனெனில்
மனிதகுலத்தை இயந்திரங்கள் அல்லது செயற்கை நுண்ணறிவால் வடிவமைக்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



