2059ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகை 4.238 கோடியாக உச்ச கட்டத்தை எட்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 12-

மலேசியாவின் மக்கள்தொகை வரும் 2059ஆம் ஆண்டில் நான்கு கோடியே இருபத்து மூன்று லட்சத்து எண்பதாயிரமாக உச்ச கட்டத்தை எட்டும்.அதன் பிறகு, 2060ஆம் ஆண்டில் நான்கு கோடியே இருபத்து மூன்று லட்சத்து எழுபதாயிரமாகவும் 2065ஆம் ஆண்டில் நான்கு கோடியே இருபது லட்சத்து எண்பதாயிரமாகவும் 2070ஆம் ஆண்டில் நான்கு கோடியே பதினான்கு லட்சத்து முப்பதாயிரமாகவும்ப அது படிப்படியாகக் குறையும்.

மக்கள் தொகை விகிதம் 2020ஆம் ஆண்டிலிருந்து 2059ஆம் ஆண்டு வரை சீராக வளர்ச்சி கண்டுவரும் என்றபோதிலும், 2020ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் வெறும் 1.7 விழுக்காடாகவே இருக்கும். அது படிப்படியாகக் குறைந்து 2060ஆம் ஆண்டில் வெறும் 0.1 விழுக்காடாகவே இருக்கும் என்று தலைமைப் புள்ளியியல் நிபுணர் உஸிர் மாஹிடின் தெரிவித்தார்.

கிளந்தான், பகாங், பேராக், திரெங்கானு, புத்ராஜெயா ஆகிய மாநிலங்களில் 2060ஆம் ஆண்டுவரை மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் என கணிக்கப்பட்டுள்ளது என்றும் உஸிர் சொன்னார்.

2060ஆம் ஆண்டில் சிலாங்கூரில்தான் மக்கள்தொகை அதிகமாக இருக்கும். அந்த ஆண்டில் அம்மாநிலத்தின் குடியிருப்புவாசிகளின் எண்ணிக்கை எண்பத்தோரு லட்சமாக இருக்கும். அதற்கு அடுத்தபடியாக, ஜொகூரின் மக்கள்தொகை 49 லட்சத்து 90ஆயிரமாகவும் சபாவின் மக்கள் தொகை 48 லட்சத்து 90ஆயிரமாகவும் இருக்கும்.2025 உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு 2020-2060 காலகட்டத்திற்கான மக்கள் தொகை கணிப்புகளை புள்ளியியல்துறை நேற்று வெளியிட்டது.

தேசிய மக்கள்தொகை வளர்ச்சி 2059ஆம் ஆண்டில் உச்ச கட்டத்தை அடைவதற்கு
முன்பாக, கோலாலம்பூர் 2031ஆம் ஆண்டிலும் பினாங்கு 2040ஆம் ஆண்டிலும் லாபுவான் 2041ஆண்டிலும் சிலாங்கூர் 2049ஆம் ஆண்டிலும் ஜொகூர், கெடா ஆகியவை 2052ஆம் ஆண்டிலும் நெகிரி செம்பிலான் 2054ஆம் ஆண்டிலும் பெர்லிஸ், சரவாக் ஆகியவை 2055ஆம் ஆண்டிலும் அந்த இலக்கை அடையும் என்று உஸிர் கூறினார்.இன அடிப்படையில் பார்க்குமிடத்து, தற்போது 69.4 விழுக்காடாக உள்ள பூமிபுத்ராக்களின் மக்கள் தொகை விகிதம், 2060ஆம் ஆண்டில் 79.4 விழுக்காடாக அதிகரிக்கும்.

அதே வேளையில், 2020ஆம் ஆண்டில் 23.2 விழுக்காடாகப் பதிவான சீனர்களின் மக்கள்தொகை 2060ஆம் ஆண்டில் 14.8 விழுக்காட்டுக்கு சரிவு காணும். இந்தியர்களின் மக்கள்தொகை 6.7 விழுக்காட்டிலிருந்து 4.7 விழுக்காட்டுக்குச் சரிவுகாணும்.ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கையும் சீராக வளர்ச்சி காணும். பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். தற்போது ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 110 ஆண்கள் எனும் நிலையில் மக்கள்தொகை உள்ளது. வரும் 2060ஆண்டில் ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 114ஆண்கள் எனும் நிலையில் அது இருக்கும் என்று உஸிர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *