இன்ஸ்பெக்டர் ஷீலா' என்று அழைக்கப்பட்ட போலீஸ் அதிகாரியை நீதிமன்றம் விடுவித்தது!
- Muthu Kumar
- 13 Nov, 2024
செலாயாங்பாரு . 13-
ஓராண்டுக்கு முன்னர் வழக்கறிஞர் ஒருவரின் கண்ணியத்தை அவமதித்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றச் சாட்டிலிருந்து, 'இன்ஸ்பெக்டர் ஷீலா' என்று அழைக்கப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரை செலாயாங் மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் நேற்று விடுவித்து விடுதலை செய்தது.
ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார் (வயது 36) என்ற இயற்பெயரைக் கொண்ட ஷீலாவுக்கு எதிரான வழக்கை தாம் தொடர விரும்பவில்லை என்று, பி. தனேஸ்வரன் (வயது 41) என்ற அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறிய பின்னர், மாஜிஸ்டிரேட் நூர் ஹஃபிஸா ரஜுனி இம்முடிவை அறிவித்தார். நேற்று தொடங்கிய இவ்வழக்கின் முதல் நாள் விசாரணையின்போது, சாட்சியம் அளிக்க விரும்பிய தனேஸ்வரன் தமது விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
“உங்களின் உடலைப் பாருங்கள், பருமனான உடல்,தலை வழுக்கை மற்றும் நீர் யானை போன்று இருக்கிறது என்று கூறி, தனேஸ்வரனின் கண்ணியத்தை அவமதித்ததாக, தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை கடந்த ஆண்டு ஜூன் 6ஆம் தேது ஷீலா மறுத்திருந்தார்.
அக்குற்றத்தை அவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி, சிலாங்கூர், தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் புரிந்ததாக ஷீலா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் அவர், அதே நாளில் நண்பகல் 12 மணியளவில் எம். செல்வகுமாரி (வயது 70) என்பவரை மிரட்டியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஷீலா இன்னமும் எதிர்நோக்கி இருக்கின்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *