கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்! - கல்வி அமைச்சு தலைமையகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக 21: கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் 30 நாட்களுக்குள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கல்வி அமைச்சகத்தின் தலைமையகத்தின் முன் கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட குழு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்..

காலை 10.30 மணி முதல் கூடி அவர்கள்  ஃபத்லினாவுக்கான ஒரு குறிப்பாணையை அமைச்சக அதிகாரியிடம் சமர்ப்பித்தனர்.

பள்ளிகளில் அதிகரித்து வரும் பகடிவதை கொடுமைகளைச் சமாளிக்க ஃபத்லினா எந்த உடனடி, பயனுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மாணவர்கள் தாக்கல் செய்த பகடிவதை அறிக்கைகளை ஆராய சுயாதீன பார்வையாளர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அதன் கண்டுபிடிப்புகள் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், பள்ளிகளில் ஆலோசகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் உளவியல் சமூக ஆதரவு அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவிகள் போன்ற கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறுவப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *