பொதுமக்களுடன் அளவளாவும் பேரரசர்!
- Muthu Kumar
- 16 Aug, 2025
மெர்சிங். ஆக. 16-
கோத்தா திங்கி-மெர்சிங் நெடுஞ்சாலையின் டுசுன் பாந்தி ஓய்வெடுப்பு பகுதிக்கு (ஆர் அண்ட் ஆர்) நேற்று எதிர்பாராத வகையில் வருகை மேற்கொண்ட மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் மைன உணவகமொன்றில் வருகையாளர்களுடன் அளவளாவினார்.
மெர்சிங் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரரசர், காலை உணவுக்காக அந்த உணவகத்திற்கு வந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் கனிவுடன் வரவேற்றனர் என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வேளையில், புதிதாகப் பிறந்த சிசுவை கையில் ஏந்தியபடி அதன் பெற்றோருடன் புகைப்படத்திற்குப் பேரரசர் காட்சி தந்தார். அப்படமும் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



