அதிகாரத்தின் அகம்பாவம் மிகுந்த காலம் முடிவடைய வேண்டும்! - அன்வார்
- Shan Siva
- 21 Aug, 2025
கோலாலம்பூர், ஆக் 21: அதிகாரத்தின் “அகம்பாவமிகுந்த காலம்” முடிவடைய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றில்
கட்டுப்பாடற்ற அதிகாரம் சட்ட அமைப்பின் நேர்மையை ஆபத்துக்குள்ளாக்கி, பொதுமக்களின்
நம்பிக்கையை சிதைக்கும் என்று அவர் எச்சரித்தார்.
சட்ட அமைப்பும் நீதித்துறையும் சுதந்திரமான, ஜனநாயக
நாட்டின் தூண்களாக நிலைத்திருக்க தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்
என்றும், நீதியின் நிர்வாகத்தில் நேர்மையும் பொதுமக்களின் நம்பிக்கையும் உறுதி
செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சட்ட அமைப்பு என்பது சுதந்திரமான, சுயாதீனமான மற்றும் ஜனநாயக
நாட்டின் முதுகெலும்பு என்று அவர் கூறினார்.
அரசியல் அதிகாரத்தின் அகம்பாவம் சட்டங்களின் விளக்கத்தில்
சேதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய காலங்கள் இருந்துள்ளதை வரலாறு காட்டுகிறது.
மேலும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன என்று அவர் 2025-ஆம் ஆண்டுக்கான ஆசியான் சட்ட
மாநாட்டின் நிறைவுவிழாவில் முக்கிய உரையாற்றும்போது
தெரிவித்தார்.
அசாலினா தலைமையில், சட்டத்துறை வழக்குரைஞர் பிரிவுடன் இணைந்து,
தேசிய சட்ட
அமைப்பின் நேர்மையை வலுப்படுத்தும் சீர்திருத்த முயற்சிகளுக்கு அரசு முழுமையாக
ஆதரவு தருகிறது என்று அன்வார் கூறினார்.
மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தும்போது, அசாலினா
மிகுந்த உறுதியும் நம்பிக்கையுடனும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுகிறார் என்று அன்வார்
தெரிவித்தார்.
சட்டத்துறை வழக்குரைஞர் பிரிவுடன் மேற்கொள்ளப்படும் இந்தச்
சீர்திருத்தங்கள், அதிகார துஷ்பிரயோகத்தை ஒழிப்பதில் புதிய நம்பிக்கையை
ஊக்குவிக்கும் என்றும் அன்வார்
கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



