மக்களின் அத்தியாவசியத் தேவைகள் முக்கியம்; அதற்குப் பிறகுதான் சீர்திருத்தம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 10: நாட்டின் தலைமைத்துவம் நேர்மை, ஊழலுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு, அடிப்படை சம்பள பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

தலைமைத்துவம் மக்களிடமிருந்து விலகாமல், அவர்களின் அன்றாட வாழ்வுச் சவால்களுடன் இணைந்திருக்க வேண்டும், அதே நேரத்தில் அரசமைப்பு சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

துருக்கியில் அரசுமுறை பயணத்தின் போது, TRT World தொலைக்காட்சியின் One on One நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.
கூட்டணி அரசின் தலைவராக ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க முடியாது என்றும், ஒவ்வொரு விவகாரத்தையும் கூட்டாக விவாதித்தே தீர்வு காண வேண்டியுள்ளது என்றும் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தலைவர் தனக்கு செல்வம் சேர்க்காதவராகவும், ஊழலுக்கு எதிராக வலுவான நிலைப்பாடு கொண்டவராகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் திட்டம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் புறக்கணித்து சீர்திருத்தங்களை அவசரப்படுத்தினால், அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
ஊழலில் ஈடுபட்ட சக்திவாய்ந்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சவாலானது என்றும், அவர்களிடம் பணம், ஊடக ஆதிக்கம், சட்ட மற்றும் அமலாக்க அமைப்புகளில் செல்வாக்கு இருப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

தன் முதல் ஆண்டுக் கால ஆட்சியில், தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் மற்றும் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *