நாளைய தீர்ப்பில் மூடாவின் எதிர்காலம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 24: நாளை அறிவிக்கப்படவிருக்கும் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானின் ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கான தண்டனை மற்றும் அதற்கு எதிரான மேல்முறையீட்டின் முடிவைப் பொறுத்து, மூடா கட்சியின் எதிர்காலம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான சையத் சாடிக், கடந்த 2023 இல் பதவி விலகியதிலிருந்து கட்சியின் தலைவர் பதவியை வகிக்கவில்லை என்றாலும், அதன் நிறுவனர் மற்றும் நாடாளுமன்றத்தில் ஒரே பிரதிநிதியாக அவர் வகித்த பங்கின் காரணமாக அவர் மூடாவில் ஒரு முக்கிய நபராக இருந்தார் என்று அக்கட்சியின் தற்காலிகத் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், புதிய தலைவரை நியமிக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும் அமிரா கூறினார்.

இப்போதைக்கு, அந்தப் பதவியை நிரப்ப வேண்டிய அவசரம் எதுவும் இல்லை என்றும், உறுப்பினர்களின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும் அவர் கூறினார்.

2023 நவம்பரில், குற்றவியல் நம்பிக்கை மீறல், சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பணமோசடி செய்ததற்காக சையத் சாதிக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சராகவும் இருந்த அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM10 மில்லியன் அபராதம் மற்றும் இரண்டு பிரம்படிகள் வழங்க உத்தரவிடப்பட்டது. இருப்பினும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவது நிலுவையில் உள்ளதால், தண்டனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பின்னர் அவர் தற்காலிகமாக மூடா தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், கட்சியின் முடிவெடுக்கும் செயல்முறைகளில் ஈடுபடப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

Nasib parti MUDA bergantung pada keputusan rayuan kes rasuah Syed Saddiq. Walaupun tidak lagi presiden, peranannya penting. Ketua sementara Amira Aisyah menyatakan tiada keperluan segera memilih pemimpin baharu sehingga keputusan mahkamah diumumkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *