பன்றி இறைச்சிக் கூடத்தில் டீசலை மறைத்து வைத்த கும்பலின் செயல் அம்பலம்!
- Muthu Kumar
- 31 Oct, 2025
கோலாலம்பூர், அக்.31-
உதவித் தொகை டீசலை மறைத்து வைக்க பன்றிகள் வளர்க்கப்படும் தலம் பயன்படுத்தப்படுகிறது.பேரா, ஆயர் தாவார் அருகிலுள்ள மறைவான ஓரிடத்தில் உதவித் தொகை டீசலைச் சேகரித்து வைத்து மோசடிச் செய்வது கண்டுபிடிக்கப்பட்டதாக பேரா மாநில உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்கான அமைச்சின் இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
2 வாரத்திற்கு உளவு மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அந்த சட்டவிரோதச் செயல் அண்மையில்.அம்பலப்படுத்தப்பட்டது.அதன் பிறகு அமைச்சின் பேரா மாநில அமலாக்க அதிகாரிகள், உறுப்பினர்கள் குழு ஓப்ஸ் திரிஸ் சோதனை நடவடிக்கை வாயிலாக அத்தலத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இக்கும்பலின் செயல்முறை மஞ்சோங் வட்டாரச் சுற்றுப் பகுதிகளின் பெட்ரோல் நிலையங்களில் உதவித் தொகை டீசலைப் பெறுவதாகும்.அதன் பிறகு அந்த டீசல் பன்றிகள் வளர்க்கப்படும் தலத்திலுள்ள பெரிய தொட்டிக்கு மாற்றப்படும். அது சொந்த பயன்பாடு மற்றும் சட்டப்பூர்வ பெர்மிட்டில்லாமல் மீண்டும் விற்பதற்கும் ஆகும்.
சோதனை நடவடிக்கையின் போது 2,000 லிட்டர் டீசல் தொட்டியில் வைக்கப்பட்டிருப்பதைக் குழுவினர் கண்டுபிடித்தனர்.இதில் டீசலுக்கான அனுமதிக் கடிதம், உரிமம் அல்லது பெர்மிட்டைக் காட்டத் தவறியதைத் தொடர்ந்து லோரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் என ஒப்புக் கொண்ட 39, 49 வயதுடைய 2 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தில் வெ.42,680 மதிப்புள்ள டீசல், லோரி, 6 தொட்டிகள், பம்ப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் 1961 கையிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக ஓர் அறிக்கையில் ஏசிபி முகமட் ஃபாரிட் அகமட் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



