இயோவின் 2014 புத்தகத்தை அரசாங்கம் தடை செய்ததில்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன. 16

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்டிருந்த ஹன்னா இயோ எழுதியிருந்த 'பிக்காமிங் ஹன்னா: எ பெர்சனல் ஜெர்னி' என்ற தலைப்பிலான புத்தகத்தை அரசாங்கம் தடை செய்தது கிடையாது என்று, அரசியல் அறிவியல் பேராசிரியர் ஒருவர், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான இயோவின் புத்தகத்தை தாம் கடந்த 2017ஆம் ஆண்டில் வாங்கி இருந்ததாக, வட மலேசிய பல்கலைக் கழகத்தின் அனைத்துலக கல்விப் பள்ளியைச் சேர்ந்த கமாருல் ஸமான் யூசோப் சாட்சியம் அளித்திருக்கின்றார்.

2017ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு முகநூல் பதிவுகள் தொடர்பில் கமாருல் ஸமானுக்கு எதிராக இயோ தொடுத்திருக்கும் ஓர் அவதூறு வழக்கில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சாட்சியம் அளித்தபோது கமாருல் இவ்வாறு தெரிவித்தார்.

தாம் பதிவிட்டிருந்த அவ்விரு பதிவுகளுக்கும் தாமே பொறுப்பு என்றும் அவற்றில் தாம் குறிப்பிட்டிருப்பவர், சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான இயோதான் என்றும் கமாருல் ஸமான் தமது சாட்சியத்தில் ஒப்புக் கொண்டார்.அவரின் புத்தகத்தின் உள்ளடக்கத்தை வைத்து, அப்பதிவுகளில் இயோவை தாம் ஒரு “நயவஞ்சகர்" என்று முத்திரை குத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

புத்தகத்தின் உள்ளடக்கங்கள் குறித்து நாட்டிலுள்ள முஸ்லிம்கள் ஆட்சேபனைகளை எழுப்பவில்லை என்று. இயோவின் வழக்கறிஞர் சங்கீத் கோர் டியோ கூறியதை கமாருல் நிராகரித்தார்.எனினும், கடந்த 2014ஆம் ஆண்டில் அப்புத்தகம் வெளியிடப்பட்டது முதல், அதற்கு எதிராக, முஃப்தியோ. சட்டத்துறை அமைச்சரோ அல்லது வேறு யாராவது அதிகாரத் தரப்பினரோ நடவடிக்கை எடுக்காதிருந்ததை கமாருல் ஒப்புக் கொண்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில், பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

இயோவின் புத்தகத்திற்கு ரஃபிஸீ ரம்லியும் ஷாரி சுங்கிப்பும் முன்னுரைகளை எழுதி இருந்ததையும் அப்புத்தகத்தின் உள்ளடக்கங்களில் எந்த விவகாரமும் இல்லை என்று பாஸ் கட்சியே ஒப்புக் கொண்டிருந்தது
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரான ரஃபிஸி தற்போது பொருளாதார அமைச்சராக இருக்கும் வேளையில், அமானா கட்சியின் ஷாரி சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

இந்நிலையில், தாம் பதிவிட்ட இரண்டு பதிவுகளும் இயோ மீது அவதூறை பரப்பும் நோக்கத்திலானவை அல்ல என்று, 2021 முதல் 2022 ஆண்டு வரையில் பிரதமரின் சிறப்பு அதிகாரியாக இருந்த கமாருல் கூறினார்.
நீதிபதி அலிஸா சுலைமான் முன்னிலையில் நடைபெற்று வரும் இவ்வழக்கின் விசாரணை இன்று வியாழக்கிழமை தொடரும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *