அன்வார் எதிர்ப்புப் பேரணி தொடர்பில் செகுபார்ட் கைது!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29-

கடந்த வாரம் நடைபெற்ற "தூருன் அன்வார்" பேரணி தொடர்பாக பெர்சத்து கட்சியின் தலைவர்களுள் ஒருவரான செகுபார்ட் கைதுசெய்யப்பட்டுள்ளார். பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் எனும் இயற்பெயரைக் கொண்டவரான செகுபார்ட், நேற்று பிற்பகல் 2.30மணியளவில் அவருடைய வீட்டில் கைது செய்யப்பட்டார் என்று பட்ருலின் வழக்கறிஞர் ரபீக் ரஷிட் அலி தெரிவித்தார்.

புக்கிட் அமான் போலீஸ் அதிகாரி ஒருவரை செவ்வாய்க்கிழமையன்று (இன்று) சந்திக்க பட்ருல் இணக்கம் தெரிவித்திருந்த வேளையில், அவரைப் போலீசார் கைது செய்திருப்பது தேவையற்ற ஒன்றாகும் என்று ரபீக் சாடினார்.அந்த அன்வார் எதிர்ப்புப் பேரணியில் விரும்பத்தகாத சம்பவங்கள் எதும் நடைபெறாததால் அவரைக் கைது செய்திருப்பது வருந்தத்தக்கதாகும் என்றார் ரபீக்.

தேசநிந்தனைக்குரிய போக்குடன் செயல்பட முற்பட்டதற்காகவும் தொடர்புவசதிகளை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காகவும் அவர் விசாரிக்கப்படுவார். அது தவிர, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் அநாகரிகமாக நடந்து கொண்டது, அவமரியாதையாகப் பேசியது ஆகியவை தொடர்பிலும் அவர் மீது விசாரணை நடத்தப்படும்.பட்ருல் இன்று புக்கிட் அமானில் முன்னிலையான பிறகு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *