தணியும் வெப்பம்... மே மாதம் வரை பலத்த காற்று வீசும்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஏப் 4: மே மாதம் வரை குறுகிய காலத்திற்கு கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இது சமீபத்திய வெப்பமான வானிலையிலிருந்து நிவாரணம் அளிக்கும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்தார்.

இந்த நிலைமை தீபகற்பத்தின் மேற்கு, வடக்கு மற்றும் உட்புறப் பகுதிகள், அத்துடன் சபா மற்றும் சரவாக் ஆகிய பல பகுதிகளில் பிற்பகல் முதல் மாலை வரை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பொறுப்பான குருப், வடகிழக்குப் பருவமழை முடிவடைந்ததைத் தொடர்ந்து, குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியில் மேகமூட்டம் குறைந்ததன் விளைவாகவே தற்போதைய வெப்பமான வானிலை நிலவுகிறது என்று கூறினார்.

35 டிகிரி செல்சியஸை விட அதிகமான வெப்பநிலை பதிவான பகுதிகளில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுத் துறையின் சமீபத்திய கண்காணிப்பு காட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

தீபகற்ப மலேசியாவில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அதிகபட்ச தினசரி வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் எட்டு பகுதிகள் மட்டுமே இன்னும் நிலை 1 எச்சரிக்கை நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.

அணைகளில் நிலையான நீர் சேமிப்பை உறுதி செய்வதற்காக, தீபகற்பத்தின் வடக்கு மாநிலங்களிலும்  ஜொகூரிலும் ஏப்ரல் 6 முதல் 9 வரை தேசிய பேரிடர் மேலாண்மை முகமை மற்றும் விமானப்படை சார்பில் மேக விதைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *