சிங்கப்பூர் கும்பலால் தீவைக்கப்பட்ட விடுகள்! MP நேரில் சென்று விசாரணை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 12: ஜொகூர் இஸ்கண்டார் புத்ரியில் உள்ள புக்கிட் இண்டாவில், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்கள் எனக் கூறப்படும் சம்பவத்தில் நான்கு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உரிமம் இல்லாத பணக்கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்காக 1951 ஆம் ஆண்டு பணக்கடன் வழங்குவோர் சட்டத்தின் பிரிவு 5(2)-இன் கீழும், தீயினால் சேதம் விளைவித்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 435-இன் கீழும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்கண்டார் புத்ரி காவல் தலைமையகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த உரிமம் இல்லாத பணக்கடன் வழங்கும் கும்பலால் குறிவைக்கப்பட்டதாக நம்பப்படும் அந்த வீடுகளை இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லியூ சின் டோங் பார்வையிட்டார்.

தகவல் கிடைத்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்த புக்கிட் இந்தா காவல் தலைவர் ஜே.எம். ஆல்வின் சுதேஷனுக்கு அவர் தனது முகநூல் பதிவில் பாராட்டு தெரிவித்தார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *