உதவி செய்யும் எண்ணமே சிறந்தது! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், அக் 13: கிள்ளான், புக்கிட் திங்கி ஸ்ரீ மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் தீபாவளி அன்பளிப்பு பொருள்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

7 வது ஆண்டாக செல்வீனா அன்பு இல்லத்தின் ஏற்பாட்டில், புக்கிட் திங்கி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரின் ஒத்துழைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் கலந்துகொண்டு, தீபாவளி அன்பளிப்புப் பொருள்களை எடுத்து வழங்கினார்.

தீபாவளி நேரத்தில் இதுபோன்ற உதவிப் பொருள்களை வழங்குவது போற்றுதலுக்குரியது. சுமார் 300 பேருக்கு இந்த உதவிகளை ஏற்பாடு செய்திருக்கும் செல்வீனா அன்பு இல்லத்திற்கும், அவர்களோடு கைகோர்த்து உதவி வரும் மற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார். அதோடு பள்ளிக்கூடங்களுக்கும் இவர்கள் உதவிக்கரம் நீட்டி வருவது பாராட்டுக்குரியது என்று கூறினார்.

உதவி செய்யும் எண்ணமே சிறந்தது. உதவி என்று வரும்பொழுது சிறியதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, நம்மால் இயன்றதைச் செய்யும் மனம் எல்லாருக்கும் எப்போதும் அமைய வேண்டும்.  அந்த வகையில் தொடர்ந்து இவர்களின் சேவைகள் அமைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தீபாவளி அன்பளிப்போடு, அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. முதியவர்களுக்கு சிறப்பு நிதியும் வழங்கப்பட்டது.  சிறப்பான உணவு உபசரிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்பினைச் சேர்ந்தவர்களும் அன்பளிப்புப் பொருள்களை எடுத்து வழங்கினர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *