ஒற்றுமையின் ஒளி! - கிள்ளானில் தீபாவளி விருந்துபசரிப்பு
- Shan Siva
- 18 Oct, 2025
கிள்ளான், அக்டோபர் 18: சிலாங்கூர், மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டம் நேற்று அக்டோபர் 17ஆம் தேதி கிள்ளான் மாநகரின் பாடாங் செட்டியில்
சிறப்பாக நடைபெற்றது. சிலாங்கூர் மாநில மனிதவளம், வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா
ராய்டு தலைமையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி
புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கிள்ளான்
நாடாளுமன்ற உறுப்பினர் கண்பாதி ராவ், ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் மற்றும்
சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள்
தொழிலதிபர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் ஐ-சீட்
எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா
சார்பாக தொழில் முனைவோருக்கு வர்த்தக உபகரணங்களும் வழங்கப்பட்டது. சிலாங்கூர் மந்திரி
அதனை எடுத்து வழங்கினார்.
மேலும், முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டது. சுமார் 134 வழிபாட்டு
தலங்கள் இந்த உதவிகளைப் பெற்றனர்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்
வறுமையை ஒழிக்க சிலாங்கூர் அரசு இலக்கு வைத்துள்ளது என்று முதல்வர் கூறினார்.
இதுவரை, இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் சுமார் 2,000 நபர்கள்
வறுமையின் விளிம்பில் இருப்பதாக மாநில மேம்பாட்டு நடவடிக்கை கூட்டத்தில்
கண்டறியப்பட்டுள்ளது என்று டத்தோ ஸ்ரீ ' அமிருடின் ஷாரி
கூறினார்.
வறுமையை
ஒழிப்பதற்கான சூத்திரம் வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் மேலும் வலுப்படுத்தப்படும் என்று அமிருடின்
விளக்கினார்.
ஒற்றுமையையும்
செழிப்பையும் நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும், சமய அல்லது இனப்
பிரச்சினைகளுடன் விளையாடுபவர்களை நிராகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
'ஒற்றுமையின் ஒளி
சிலாங்கூர் நல்லிணக்கம்' என்ற
கருப்பொருளில் நடைபெற்ற இந்த விருந்துபசரிப்பில்
ஆடல் பாடல் உற்சாகமாய் இடம்பெற்றது. ஏராளமானோர் மழையைப் பொருட்படுத்தாது கலந்துகொண்டு
மகிழ்ந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



