பஹ்ரைனில் மாமன்னர்!
- Shan Siva
- 07 Nov, 2025
கோலாலம்பூர், நவ 7: மாட்சிமை தங்கிய மலேசிய
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று
பஹ்ரைனுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டதை அடுத்து, சாகிர் அரண்மனையில் முறையான அரசு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரச இல்லத்திற்கு
வந்த மாமன்னரை மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபா வரவேற்றார்.
இரு நாடுகளின்
கொடிகளையும் அசைத்து பஹ்ரைன் மாணவர்கள் அரண்மனை நுழைவாயிலில் இரு மன்னர்களையும்
வரவேற்றனர்.
பஹ்ரைனின் பாரம்பரிய
அர்தா நிகழ்ச்சியை மாமன்னர் பார்வையிட்டார்.
பின்னர் 21-துப்பாக்கி குண்டுகள் முழங்க செலுத்தப்பட்ட மரியாதையை
அவர் ஏற்றுக்கொண்டார்.
பஹ்ரைனின்
பிரதமராகவும் பணியாற்றும் பட்டத்து இளவரசர் சல்மான் ஹமத் அல் கலீஃபாவும் கலந்து
கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



