ஹெனிக்கனின் இலவசப் பயிற்சி நுணுக்கமானது! முன்னாள் காவல் அதிகாரி சுரேஷ்!

top-news

ஏப்ரல் 28,

Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER ஏற்பாட்டில் மலர் டெய்லி ஒத்துழைப்பில் வழங்கப்படும் தொழில்முனைவோருக்கான இயங்கலை செயற்கை நுண்ணறிவு பயிற்சி பயிலரங்கம் தன்னை போன்ற சிறுதொழில் வணிகர்களுக்குப் பயனாகவும் கூடுதல் நுணுக்கங்களையும் அறியும் வாய்ப்பாக இருக்கும் என பணி ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான சுரேஷ் முனியாண்டி தெரிவித்தார். Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொழில்முனைவோர்களுக்கு இலவசமாக டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கவுள்ளது. இந்த அரிய வாய்ப்பை தலைநகர் ஸ்தாப்பாக்கை சேர்ந்த சுரேஷ் முனியாண்டியும் பெற்றார். 

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் டிஎஸ்பி பதவியிலிருந்து விருப்ப ஓய்வு சுரேஷ் முனியாண்டி சட்ட அமலாக்கங்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்களை எழுதி  வெளியிட்டு வருகிறார்.  மலாய் மொழியில் புலமைப் பெற்ற இவர், தமது அனைத்து புத்தகங்களையும் மலாய் மொழியிலேயே எழுதி வருகிறார். பகுதி நேர சட்ட விரிவுரையாளராகவும் தாம் பணி புரிந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.   சட்டப் படிப்பை மேற்கொள்ளும் குறிப்பாக B40 மாணவர்களுக்கு தமது புத்தகங்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER இலவசமாக வழங்கும் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சியின் மூலமாக அதிகமான சட்ட விளக்கங்களைக் கொண்ட இயங்கலை தலத்தை அமைக்க வேண்டும் என பணி ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான சுரேஷ் முனியாண்டி தெரிவித்தார். தமது மனைவி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் உயர்நிலை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் மூத்த மகன் சட்டப் படிப்பை முடித்துவிட்டதாகவும் மற்றொரு மகன் இந்தோனேசியாவில் ஏர் லங்கா பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவ கல்வியை மேற்கொண்டு வருகிறார் என்றும் சுரேஷ் முனியாண்டி தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *