ஹெனிக்கனின் இலவசப் பயிற்சி தொழிலை விரிவுப்படுத்த உதவும்! பி. கரிகாலன் !

top-news

ஏப்ரல் 28

Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER ஏற்பாட்டில் மலர் டெய்லி ஒத்துழைப்பில் வழங்கப்படும் தொழில்முனைவோருக்கான இயங்கலை செயற்கை நுண்ணறிவு பயிற்சி பயிலரங்கம் தொழிலை விரைவாக விரிவுப்படுத்த பேருதவியாக இருக்கும் என SECURETEAM SERVICES என்ற துப்புரவு சேவை நிறுவனத்தின் நிறுவனர் பி. கரிகாலன் தெரிவித்தார். Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER எதிர் வரும் மே ஆம் தேதி முதல் மே ஆம் தேதி வரை நாட்களுக்கு கோலாலம்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொழில்முனைவோர்களுக்கு இலவசமாக டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கவுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பி. கரிகாலன் அவர்களும் பெற்றார்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக சைபர் ஜெயாவில் தனது PRO SECURETEAM SERVICES எனும் நிறுவனத்தைத் தாம் நடத்தி வருவதாகவும் பி.கரிகாலன் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அலுவலகத்திற்குச் சென்ற போது அந்த அலுவலகம் மிகவும் அசுத்தமாகக் காணப்பட்டது. அலுவலகத்தில் இருந்தவர்களிடம் நான் கேட்ட போது துப்புரவு தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக இருப்பதாகப் பதிலளித்தனர். அங்கிருந்து தான் நான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். எல்லா தொடக்கத்திற்கும் ஓர் உந்துதல் தேவை. அப்படியான உந்துதலை Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER வழங்குகிறது. இயங்கலையில் நமது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் இப்பயிற்சியின் மூலமாகப் பெற்று வருவதாகவும் PRO SECURETEAM SERVICES எனும் நிறுவனத்தை நடத்தி வரும் பி.கரிகாலன் தெரிவித்தார். 


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *