ஹெனிக்கனின் இலவசப் பயிற்சி நவீனத்துவமிக்கது! – விவசாயி ரவீந்திரன்!

top-news

ஏப்ரல் 26,

Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER ஏற்பாட்டில் மலர் டெய்லி ஒத்துழைப்பில் வழங்கப்படும் தொழில்முனைவோருக்கான இயங்கலை செயற்கை நுண்ணறிவு பயிற்சி பயிலரங்கம் தன்னை போன்ற விவசாயிகளுக்கும் பயனளிப்பதாகப் பந்திங்கைச் சேர்ந்த விவசாயியான ரவீந்திரன் தெரிவித்தார். 

Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொழில்முனைவோர்களுக்கு இலவசமாக டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கவுள்ளது. இந்த அரிய வாய்ப்பை ரவீந்திரனும் பெற்றுள்ளார். 

கடந்த 13 ஆண்டுகளாக Simply Fresh Farm Enterprise எனும் சொந்த நிறுவனத்தின் கீழ் காளாண்களை விதைத்து, விற்பனை செய்து வருவதாக ரவீந்திரன் தெரிவித்தார். காளாண் வியாபரத்தில் பெரும்பாலும் சீனர்கள் ஈடுபட்டு வருதாகவும் தமிழராக இந்த துறையில் 13 ஆண்டுகளாகச் செயல்படுவது மட்டுமின்றி காளாண் பயிரிடுவது குறித்து பலருக்கும் கற்றுத் தருவதாகவும் ரவீந்திரன் தெரிவித்தார். 

தோட்டத்தில் காளாண் மட்டுமின்றி மரவள்ளிக் கிழங்குகள், காய்கறிகளையும் பயிரிட்டு வருவதாகவும் வென்னிலா ஐஸ்கிரீம்க்குப் பயன்படுத்தும் அவரைச் செடிகளையும் பயிருட்டு வருதவதாகவும் ரவீந்திரன் தெரிவித்தார். விவசாயத்துறையில் பட்டம் பெற்றதுடன் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவுகளின் மூலமாக மேலும் தனது விவசாயத்திற்குத் தேவையான மேம்பாடுகளையும் உருவாக்க முடியும் என ரவீந்திரன் தெரிவித்த்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *