பள்ளிகளில் உள்ள இணைய வசதி பிரச்சினைகளை கல்வியமைச்சு அறிந்துள்ளது!

top-news
FREE WEBSITE AD

கலாபாக்கான், மே 10-

இலக்கவியல் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், பள்ளி பகுதிகளில் இணைய வசதி குறைவாக அல்லது முற்றிலும் இல்லை என்பதை கல்வி அமைச்சு அறிந்திருக்கிறது.குறிப்பாக, புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு முக்கியத்துவம் அளிக்கும் நிலையில், அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் புறக்கணிக்க முடியாது.

அதனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று நாடாளுமன்ற தொடர் நடவடிக்கை திட்டம் செயல்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்தார்."நாங்கள் எப்போதும் மாநில அரசாங்கத்துடன் பேச்சை நடத்தி வருகிறோம். மேலும், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காண மாநில அரசாங்கங்களுடனான பேச்சுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்வது எங்களது தரப்பில் மிகப் பெரிய உறுதிப்பாடு என்று நான் நினைக்கிறேன்,"
என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியின் போது கலாபாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆன்டி முஹமட் சுர்யாடிஃபன்டியுடன் இணைந்து அத்தொகுதியில் உள்ள உலு கலாபாக்கான் தேசியப் பள்ளி, கலாபாக்கான் தேசிய பள்ளியையும் உமாஸ் தேசிய பள்ளியின் கூடுதல் கட்டிட கட்டுமானத் தளத்தையும் ஃபட்லினா சிடேக் பார்வையிட்டார்.

Kementerian Pendidikan sedar masalah capaian internet lemah di sekolah pedalaman walaupun dasar pendidikan diperkenal. Menteri Fadhlina Sidek tegaskan kerjasama negeri penting atasi isu ini. Lawatan tapak dilakukan di kawasan Parlimen Kalabakan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *