பாலர் பள்ளி முதல் இடைநிலைக்கல்வி வரையிலான கல்வி வளர்ச்சியில் கல்வியமைச்சு முழுக் கவனம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக. 2-

நாட்டின் கல்வி முறை கவனமாக கையாளப்படுவதுடன், பயன்மிக்கதாக இருப்பதை உறுதி செய்யும் முயற்சியாக. 13ஆவது மலேசியத் திட்டத்தின் மூலம் பாலர் பள்ளி தொடங்கி இடைநிலைக்கல்வி வரை அமைச்சு முழு கவனம் செலுத்தும்.

அதன்பொருட்டு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பைப் பழுதுபார்த்தல், மேம்படுத்துதல் மற்றும் புதிய பள்ளிகளைக் கட்டுதல் உட்பட கல்வித் துறைக்கு 6,700 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கல்விமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

ஐந்து வயதிலிருந்து பாலர் கல்வியைக் கட்டாயமாக்கும் நடவடிக்கை, குழந்தைகளுக்கு முழுமையான மற்றும் விரிவான அடிப்படை கற்றல் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஃபட்லினா சிடேக் விவரித்தார்.எனவே, இந்த முயற்சி வெற்றியடைவதை உறுதி செய்யும் வகையில் கல்வி அமைச்சின் கீழ் நாடு தழுவிய அளவில் உள்ள பாலர் பள்ளிகளில் மேலும் பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் பெரிய அளவிலான புதிய வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, மாற்றம் காணும் பள்ளி கட்டுமான முயற்சிகள், உயர்மாடிகள் கொண்ட பள்ளி கட்டுமானத்தின் விரிவாக்கம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.

அதிலும் குறிப்பாக, அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் உள்ள நெரிசல்மிக்க பள்ளிகள் மற்றும் சரியான தளங்களில் பள்ளிகள் கட்டப்படுவது போன்றவை கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும் என்று கல்வியமைச்சர் விளக்கமளித்தார்.

அதைத் தவிர்த்து மலாய், ஆங்கில மொழிகளில் தேர்ச்சியை/வலுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக, அறிவியல்,தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், தொழிற்கல்வி மற்றும் தொழில் பயிற்சி, திவெட் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட இலக்கவியல் சார்ந்த துறைகளைக் கல்வித்துறையில்
வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஃபட்லினா சிடேக் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *