1,630 ரிங்கிட்டை உட்படுத்தி சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சைக்கான முழு செலவையும் சுகாதார அமைச்சு ஏற்கிறது!

top-news
FREE WEBSITE AD

ல்கோலாலம்பூர், செப். 11-

மாதத்திற்கு 1,630 ரிங்கிட் 50 காசு வரை உதவித் தொகையுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சைக்கான முழு செலவையும் சுகாதார அமைச்சு ஏற்கிறது.

சுகாதார அமைச்சு அங்கீகரித்த 138 அரசு சார்பற்ற சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை மையங்களில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை இதில் உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஒரு நாளைக்கு பத்து ரிங்கிட்டிற்கும் மேற்போகாத செலவை மட்டும் ஏற்க வேண்டும் என்றும் அதன் துணை அமைச்சர் லுக்கானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார்.

"ஒவ்வொரு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்கும் நூறு ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும். அதிகபட்சம் மாதத்திற்கு 14 முறை, எரித்ரோபொய்டின் தடுப்பூசிக்கு 18 ரிங்கிட் 50 காசு இதில் உட்படுத்தப்படும். மாதத்திற்கு 13 முறை. ஒரு நோயாளிக்கு மொத்த சிகிச்சை செலவு 1,640 ரிங்கிட் 50 காசு ஆகும். அதே வேளையில், அரசாங்க உதவித் தொகை 1,630 ரிங்கிட் 50 காசும் உட்படுத்தப்படுகிறது." என்றார் அவர்.

நேற்று மேலவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின் போது செனட்டர் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் முஹமட் ஹனிஃப்பா அப்துல்லாவின் கேள்விகளுக்கு பதிலளித்த போது லுக்கானிஸ்மான் அவாங் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செலவுகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தவும் பி40 பிரிவு நோயாளிகளின் சுமையைக் குறைக்கவும் பொது ஒதுக்கீட்டை மேம்படுத்தவும் சுகாதார அமைச்சின் நீண்டகால திட்டம் குறித்தும் செனட்டர் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் முஹமட் ஹனிஃப்பா முன்னதாக கேள்வி எழுப்பியிருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *