புதிய உருமாற்றத் தொற்று பரவுவதை, சுகாதார அமைச்சு அணுக்கமாக கண்காணிக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 21-

நாடு தற்போது முடிவில்லாத் தொற்று நிலையில் இருந்தாலும் கோவிட்-19 இன்
புதிய உருமாற்றத் தொற்றான எக்ஸ்.எஃப்.ஜி பரவுவதை சுகாதார அமைச்சு தொடர்ந்து அணுக்கமாக கண்காணித்து வருகிறது.

ஒமிக்ரோனின் துணை உருமாற்றுத் தொற்றான XFG, அதன் வீரியத்தின் அளவு அச்சுறுத்தும் வகையில் இல்லை என்றும், இதுவரை, ஒரே ஒரு மரணம் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர்
டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

துணை உருமாற்று தொற்றான எக்ஸ் எப்ஜி 9.1 விழுக்காடு பதிவாகியிருக்கும் நிலையில், ஜிஎம்1 எக்ஸ்  எப்ஜி 12.7 விழுக்காடு பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.நேற்று, கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் சுல்கிஃப்ளி அத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

சுகாதார அமைச்சும் தேசிய அவசரக் காலத் தயார்நிலை, பதிலளிப்பு மையம், எப்போதும்
தயாராக இருப்பதாகவும் தற்போதைய சூழ்நிலையை தமது தரப்பு இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *