ஜோ லோ மீதான விசாரணை இன்னும் தீவிரமாக உள்ளது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 26-

தப்பியோடிய தொழிலதிபர் லோ டேக் ஜோ அல்லது ஜோ லோ மீதான விசாரணை இன்னும் தீவிரமாக உள்ளது.அது இன்னும் முடிவடையவில்லை என்றும் தேசிய போலீஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மட் காலிட் இஸ்மாயில் வலியுறுத்தினார்.

தேசிய போலீஸ்படை எப்போதும் சமீபத்திய முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்து வருகிறது. விசாரணையின் தேவைகளுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார். சம்பந்தப்பட்ட நபர்கள் மீதான விசாரணை முன்னர் அறிவிக்கப்பட்டபடி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.மேலும் இந்த விஷயத்தை பகிரங்கமாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *