பிரீ பெய்டு சிம்களின் எண்ணிக்கை வரம்பு மாற்றப்படலாம்! - அரசு அறிவிப்பு
- Shan Siva
- 04 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 4: மலேசிய அரசு, eSIM மற்றும் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி நடக்கும் தொலைபேசி மோசடிகளை கட்டுப்படுத்த, ஒரு நபர் பதிவு செய்யக்கூடிய முன்பண முறை சிம்களான பிரீ பெய்டு சிம்களின் எண்ணிக்கையை மாற்றலாம் என்று கோடி காட்டியுள்ளது.
தற்போது ஒரு நபர் ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் அதிகபட்சம்
5 சிம்கள் பதிவு செய்யலாம். இது சில மோசடிகளை ஊக்குவிக்கலாம் என்று தகவல்
தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பட்ஸில் கூறியுள்ளார்.
மலேசிய தகவல் தொடர்பு மற்றும்
பல்லூடக ஆணையமான MCMC பொதுமக்கள் கருத்துக்களை கேட்டுக்கொண்டு
வரம்பை மாற்றலாமா என்று ஆய்வு செய்துவருவதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி பாட்ஸில்
தெரிவித்தார்.
சமீபத்தில், காஜாஙில் நடந்த கூட்டிணைந்த நடவடிக்கையில் 5,000 தவறான சிம்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மோசடி தடுப்பு மையம் (NSRC)
MCMC அலுவலகத்தில் திறக்கப்பட்டு, போலீஸ்,
வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரே இடத்தில்
சேர்ந்து வேலை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு
மோசடிகளை குறைக்கவும், புகார்களை ஒரே மையத்தில் செய்யவும்
உதவும் எனக் கூறப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



