2018இல் சபா தேமு வீழ்ந்ததற்கு கட்சித் தாவலே முக்கிய காரணம்!
- Muthu Kumar
- 10 Oct, 2025
கோத்தாகினபாலு, . 10-
2018ஆம் ஆண்டில் நடந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், மாநில தேசிய முன்னணி வீழ்ந்ததற்கு, மாநில மக்கள் அதை நிராகரித்ததே முக்கிய காரணம் என்று கூறப்படுவதை, சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் மீண்டும் மறுத்துள்ளார்.
சபா தேசிய முன்னணி சரித்திரத்தில் அது. எந்த ஒரு தேர்தலிலும் தோல்வி அடையவில்லை என்பதை சுட்டிக் காட்டிய அவர், 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சபா தேசிய முன்னணியைச் சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு ஓர் “அரசியல் கப்பலுக்கு தாவியதினால்தான் தேசிய முன்ன என்று வாதிடுகிறார்.
மாநில முன்னணி வீழ்ந்தது “அத்தகைய கட்சித் தாவல் நடவடிக்கை, சபாவின் அரசியல் நிலத்தன்மைக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல், தேசிய முன்னணியை தேர்வு செய்த வாக்காளர்களினால் அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கு எதிராகவும் துரோகம் செய்துள்ளனர்" என்று புங் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கட்சித் தாவல்காரர்களினால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க, சபா மாநில மக்களுக்கு, 2018ஆம் ஆண்டு சம்பவம் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று. சபா தேசிய முன்னணி தலைவருமான புங் கேட்டுக் கொண்டார்.
2018ஆம் ஆண்டு தேர்தலில் சபா தேசிய முன்னணி 31 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான போதிய இடங்களை கொண்டிருந்த தருணத்தில், பார்டி சொலிடரிட்டி தானா ஆயர்கு (ஸ்டார்) கட்சி தனது ஆதரவை மூசா அமானுக்கு வழங்கியதைத் தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி அவர் மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.
எனினும், அடுத்த 48 மணி நேரத்தில் சபா மாநில தேசிய முன்னணியின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் (அம்னோவிலிருந்து நால்வர் மற்றும் உபகோ கட்சியிலிருந்து இருவர்) வாரிசான் கட்சிக்குத் தாவியதால், அக்கட்சித் தலைவர் ஷாபி அப்டால் மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



