காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்!

top-news
FREE WEBSITE AD

பாலிங், ஏப்ரல் 1: நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன நான்கு வயது ஆட்டிசம் கசிறுவனான ஃபயாத் அஃபான் ஃபக்ரியின் உடல் என நம்பப்படும் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுங்கை குபாங் நதிக்கரையில் தேடிக்கொண்டிருந்த சிறுவனின் குடும்பத்தினரால் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக பாலிங் காவல்துறைத் தலைவர் அஸ்மி மொக்தார் தெரிவித்தார்.

குபாங்கில் உள்ள கம்போங் லண்தாக் பாயாவில் உள்ள நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை குடியிருப்பில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சுல்தானா பாஹியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காவர் குறிப்பிட்டுள்ளார்.

Mayat dipercayai milik Fayyadh Affan, kanak-kanak autisme berusia empat tahun yang hilang empat hari lalu, ditemui oleh keluarganya di tebing Sungai Kupang. Jasadnya dijumpai 500 meter dari rumahnya, dan bedah siasat dijadualkan di Hospital Sultanah Bahiyah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *